உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர் வழங்க கோரி அரூரில் 2 இடங்களில் சாலைமறியல்

குடிநீர் வழங்க கோரி அரூரில் 2 இடங்களில் சாலைமறியல்

அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கே.வேட்ரப்பட்டியில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஒகேனக்கல் குடிநீரும் வழங்கப்படவில்லை. --இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், கடும் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று காலை, 8:00 மணிக்கு காலிக் குடங்களுடன் அரூர் - திருப்பத்துார் சாலையில், கே.வேட்ரப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். --தகவலின் படி சம்பவ இடம் வந்த அரூர் போலீசார் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, ஒரு சில நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, 9:00 மணிக்கு, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் சாலையின் இருபுறமும் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.அதே போல், அரூர் அடுத்த தரகம்பட்டியில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த சில நாட்களுக்கு முன் பழுதடைந்தது. இதனால் மின்மோட்டார் இயக்க முடியாததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை, 7:30 மணிக்கு, அரூர் - அம்மாபேட்டை சாலையில், சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த தீர்த்தமலை மின்வாரிய உதவி பொறியாளர் கலையரசன் மாலைக்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், 8:30 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி