உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செம்முனீஸ்வரர் கோவில் திருவிழா ௫,௦௦௦ கிடாக்கள் வெட்டி வழிபாடு

செம்முனீஸ்வரர் கோவில் திருவிழா ௫,௦௦௦ கிடாக்கள் வெட்டி வழிபாடு

பவானி : அம்மாபேட்டை அருகே பூனாச்சியில் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் செம்முனி, வாமுனி, கருமுனி, பச்சையம்மன், பெருமாள் போன்ற தெய்வங்கள் உள்ளன. நடப்பாண்டு சித்திரை விழா, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான நேற்று, பூசாரியூர் மடப்பள்ளியில் இருந்து செம்முனி, மண்ணாத சுவாமி, பச்சையம்மன் தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு மகமேரு தேரில் வைக்கப்பட்டு, 5 கி.மீ., துாரத்தில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் சுமந்து வந்தனர். இதை தொடர்ந்து அம்மை அழைத்தல், முனியப்பன் கண் திறப்பு, பொங்கல் வைபவம் நடந்தது. இதையடுத்து குட்டிக்குடி திருவிழா நடந்தது.இதில் நேர்த்திக்கடனாக பக்தர்களால் கொண்டு வந்த, ௫,௦௦௦க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி பலி தரப்பட்டன. வெட்டப்பட்ட ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை குடித்து பூசாரிகள் பரவசமாக ஆடினர். நான்கு நாட்களாக நடக்கும் விழாவில், சுவாமி இன்று மடப்பள்ளி திரும்புதல், மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவில் உள்ளூர் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ