உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மூதாட்டியை இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள் சஸ்பெண்ட்

மூதாட்டியை இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள் சஸ்பெண்ட்

அரூர்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த நவலையைச் சேர்ந்தவர் பாஞ்சாலை, 60; இவர், நேற்று முன்தினம் பகல், 12:20 மணிக்கு, அரூரிலிருந்து ஓசூர் செல்லும் அரசு பஸ்சில், பாத்திரத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றார். இதைப் பார்த்த பஸ் கண்டக்டர், மோப்பிரிப்பட்டி அருகே, நடுவழியிலேயே பாஞ்சாலையை இறக்கி விட்டார்.இதை அறிந்த, அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல மேலாண்மை இயக்குனர், பெண் பயணியை பாதுகாப்பில்லாமல் நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர் சசிகுமார், கண்டக்டர் ரகு ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்