உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒரே யானை தாக்கியதில் 2 நாளில் இருவர் பலி

ஒரே யானை தாக்கியதில் 2 நாளில் இருவர் பலி

பாலக்கோடு:பாலக்கோடு அருகே ஒற்றை யானை தாக்கியதில் இரு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த விவசாயி பழனி, 65. இவர் எர்ரணஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாமியார் நகரில், அவரின், 3 ஏக்கர் விவசாய நிலத்தில் தக்காளி, நிலக்கடலை பயிரிட்டிருந்தார். விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை விரட்ட, நேற்று முன்தினம் நள்ளிரவு, அவருடைய நிலத்தில் காவலில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஆண் யானை ஒன்று தாக்கியதில் பழனி இறந்தார்.இதேபோல, நேற்று அதிகாலை, பாலக்கோடு அடுத்த செங்கோடப்பட்டியை சேர்ந்த துரைசாமி, 68, என்பவரையும் இதே யானை தாக்கியதில் அவரும் இறந்தார். அடுத்தடுத்து இரு தினங்களில், யானை தாக்கியதில் இரு விவசாயிகள் இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை