உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வலியுறுத்தல்

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வலியுறுத்தல்

தர்மபுரி: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், போராட்ட ஆயத்த கூட்டம், தர்மபுரி செங்கொடிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சுந்தரமூர்ததி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயன், பொருளாளர் சின்னசாமி, துணைச்செயலாளர் துரைசாமி, துணைத்தலைவர்கள் குப்புசாமி, சுப்பிரமணியம், இணைச்செயலாளர் ரகுபதி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில், ஊதிய உயர்வு, பணி பங்கீடு பேச்-சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். 42,000 ஆரம்ப நிலை பணியிடங்களில், ஒப்பந்த ஊழியர்களையும், ஐ.டி.ஐ., படித்தவர்களையும் விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள், 5,000 பேரையும் மற்றும், 9,613 கேங்மேன்களை கள உதவியாளராக மாற்றம் செய்ய வேண்டும். அர-சாணை எண், 100 ஒப்பந்தத்தில் தொழிலாளர்க-ளுக்கு பாதகமாக உள்ள சரத்துக்களில் மாற்றம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் ஓவர்சீஸ் மேன்பவர் மூலம், ஆட்களை நியமனம் செய்யலாம் என்ற வாரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமி-ழக மின்வாரியம் மறுசீரமைப்பையொட்டி, ஏற்-பட்ட ஒப்பந்தத்தை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய ஓய்வூ-திய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 18ல் சென்னை மின்வாரிய தலைமை பொறி-யாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் மின்துறை பொறியாளர் அமைப்புகளின் சார்பில், பெருந்-திரள் போராட்டம் நடக்க உள்ளது. இதில், தர்ம-புரி மாவட்டத்தில் இருந்து, ஏராளமானோர் பங்-கேற்று, போராட்டத்தை வெற்றிபெற செய்வது என, முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை