மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
2 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
2 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
2 hour(s) ago
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த ரேகடஹள்ளியை சேர்ந்தவர் தனபால், 45; பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்கிறார். இவர் மனைவி தாமரை செல்வி, 40, கூலித்தொழிலாளி; கடந்த, 1ல் இரவு, 11:00 மணிக்கு தாமரைச்செல்வி இயற்கை உபாதை கழிக்க வீட்டிலிருந்து வெளியே வர முயன்றார். அப்போது வீட்டு கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. எதிர் வீட்டுக்காரருக்கு மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்ட தாமரை செல்வி, பூட்டிய கதவை திறக்க செய்தார். அப்போது வீட்டின் மற்றொரு புறம் இருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவிலிருந்த அரை பவுன் தாலி, 16.5 கிராம் வெள்ளி கால் மெட்டி திருடு போனது தெரிந்தது. பொம்மிடி போலீசார் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 23, என்பவரை கைது செய்து, நகைகளை மீட்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago