உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உயர் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

உயர் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

காரிமங்கலம்: காரிமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ். தாசில்தார் அலுவலக வளா-கத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மகன் விஜி, 25. ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், காரிமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார்.அப்பெண் வேறு ஒருவரிடம் பேசி வந்ததால், இருவருக்கும் தக-ராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பெண் விஜியுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். இந்நிலையில் வேறு ஒருவருடன் அப்பெண்-ணுக்கு நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், காரிமங்-கலம் அடுத்த பொம்மனஹள்ளி கிராமத்திலுள்ள உயர் மின்-கோபுரத்தில் ஏறிய விஜி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.காரிமங்கலம் போலீசார் மற்றும் பாலக்கோடு தீயணைப்புத் துறை-யினர் சம்பவ இடம் சென்று, அவரை, 2 மணி நேரம் சமாதானம் பேசி, கீழே இறங்கி வரச்செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ