உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இடையபட்டியில் வேட்டைக்காரன் கருப்பசுவாமி கோயில் புரவி எடுப்பு

இடையபட்டியில் வேட்டைக்காரன் கருப்பசுவாமி கோயில் புரவி எடுப்பு

நத்தம்: நத்தம் அருகே இடையபட்டி வேட்டைக்காரன், கருப்பசுவாமி கோயில் புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று வத்திபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள் , கன்னிமார், குதிரை, மதிலை சிலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வர ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டது. கோயிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சந்தனக்குடம் , கிடாய் வெட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். இன்று மாலை வர்ணக் குடைகளுடன் வேட்டைக்காரன், கருப்பசுவாமி பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்கிறது. சுற்று கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !