உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / என்.பி.ஆர்.,ல் தடகள போட்டி

என்.பி.ஆர்.,ல் தடகள போட்டி

நத்தம்: -திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம், என்.பி.ஆர்., கல்விக்குழுமம் இணைந்து குழந்தைகளுக்கான தடகள போட்டிகள் என்.பி.ஆர்., கல்விக்குழும தடகள மைதானத்தில் நடைபெற்றது.இதையொட்டி தடகள வீரர்களின் அணிவகுப்பு ந, ஒலிம்பிக் தீபம் ஏற்ற , கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தேசியக்கொடியை என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தபசுகண்ணன் ஏற்றினார். மாவட்ட தடகள சங்க கொடியை நிர்வாக மேலாளர் கவுரி ஏற்றினார். என்.பி.ஆர்., கல்விக்குழும கொடியை தொடர்பு அலுவலர் தேவி ஏற்றினார். இதன் பின் தடகள வீரர்களுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டு குழந்தைகளுக்கான தடகள போட்டிகள் துவங்கியது. 50, 60 மீட்டர், கிரிக்கெட், திரோபால், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட தடகள சங்கத் தலைவர் துரை வரவேற்றார். செயலாளர் சிவக்குமார் விருந்தினரை கவுரவித்தார்.செவிலியர் கல்லூரி முதல்வர் அன்னலட்சுமி பேசினார். நத்தம் ராம்சன்ஸ் கல்விக்குழுமம் தாளாளர் ராமசாமி பரிசு , பதக்கம் வழங்கினார்.மாவட்ட தடகள சங்க பொருளாளர் துரைராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ