உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு வேண்டாமே: மக்கள் மனம் திருந்தினால் மட்டுமே சாத்தியம்

ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு வேண்டாமே: மக்கள் மனம் திருந்தினால் மட்டுமே சாத்தியம்

மாவட்டம் முழுவதும் கடைகள்,வணிக நிறுவனங்கள்,இறைச்சிகடைகள் என கண்ணில் பார்க்கும் இடங்களிலெல்லாம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் தாராளமாக நடக்கிறது. உள்ளாட்சிகள்,உணவு பாதுகாப்பு துறைகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றபோதிலும் அதன் பயன்பாடுகளை முழுவதுமாக தடுக்க முடியாமல் அதிகாரிகளும் திணறுகின்றனர். இதற்கென தனி நெட் வொர்க்குகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் தயாரிப்போர் செயல்படுகின்றனர். முக்கியமாக சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்துகொண்டே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தான் வேதனைக்குரிய செயலாக உள்ளது. இந்தவகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு மக்கள் ரோட்டோரங்கள்,பொது இடங்களில் வீசி செல்கின்றனர். இதனால் அவைகள் மக்காமல் இருந்து நிலத்தின் தன்மையை நாசமாக்கி பல ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே இருக்கிறது. இதோடு மட்டுமில்லாமல் ரோட்டோரங்களில் உணவுக்காக சுற்றித்திரியும் ஆடுகள்,மாடுகள் பிளாஸ்டிக் குப்பையை உணவாக நினைத்து உண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. சுற்றுச்சூழலை தொடர்ந்து பாதிக்கும் ஒருமுறை பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடுக்கும் வகையில் அரசு,தனியார் அமைப்புகளோடு இணைந்து மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் மஞ்சள் பைகளை வழங்கும் எந்திரங்களும் வைக்கப்பட்டு விற்பனையும் செய்கின்றனர். இருந்தபோதிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதித்து வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை