உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓய்வூதியர் சங்க கூட்டம்

ஓய்வூதியர் சங்க கூட்டம்

நத்தம்: அரசு திருமண மண்டப வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டப் பேரவை கூட்டம் நடந்தது.சங்கதலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் வனசேகரன்,வட்டக் கிளை செயலாளர் முனியாண்டி,இணை செயலாளர் தவநுாதன் முன்னிலை வகித்தனர். ஒய்வு தலைமை ஆசிரியர் வெள்ளைச்சாமி தொடங்கி வைத்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவும், முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் மரியபுஷ்பம், வட்டக் கிளை துணைத் தலைவர் அய்யனார் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் சுந்தரபாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ