| ADDED : ஜூலை 04, 2024 02:28 AM
கஞ்சா விற்றவர்கள் கைதுதிண்டுக்கல்: முத்தழகு பட்டியை சேர்ந்தவர் அமல்ராஜ். கரியாம்பட்டியை சேர்ந்தவர் டேவிட். இருவரும் முத்தழகு பட்டியில் கஞ்சா விற்றனர். தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.போலீஸ் குடும்பத்துக்கு உதவிதிண்டுக்கல் :காவலர் உதவும் கரங்கள் குழு சார்பில் தமிழ்நாடு போலீசில் 2003ல் பணியில் சேர்ந்து ஒட்டன்சத்திரம் ரெட்டியார்சத்திரம் போலீசில் தலைமை போலீசாக ராஜேஷ்கண்ணன் பணியாற்றினார். இவர் 2024 மார்ச்சில் உடல்நலக்குறைவால் இறந்தார். இவரது குடும்ப நலன்,மருத்துவ செலவை கருத்தில்கொண்டு டெலிகிராம் சமூக வலைதளம் மூலம் ரூ.28.46 லட்சம் உதவித்தொகை ராஜேஷ்கண்ணனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.குட்கா பறிமுதல்; இருவர் கைதுபழநி : கோதைமங்கலம் ரயில்வேகேட் அருகே இரண்டு கார்கள் நின்றன. பழநி டவுன் ரோந்து பணி போலீசார் விசாரித்ததில், திருப்பூர் மாவட்டம் உடுமலை சேர்ந்த மைதீன் பாட்ஷா 35, ஆயக்குடியை சேர்ந்த சதாம் உசேன் 35 , ஆகியோர் தடை புகையிலை பொருட்களை வாங்கி மற்றொரு காருக்கு மாற்றியது தெரிந்தது. இவர்களை கைது செய்த போலீசார் , இரு கார்கள் , 50 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.வி.ஏ.ஓ., வை தாக்கியவர் கைதுநிலக்கோட்டை : பிள்ளையார்நத்தம் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் ராஜ்குமார். தாலுகா அலுவலகத்தில் சக வி.ஏ.ஓ.,க்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த குகன், ஆக்கிரமித்த நிலத்தை அகற்ற கூறி வி.ஏ.ஓ., ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வி.ஏ.ஓ., வை தாக்கிவிட்டு தப்பினார். நிலக்கோட்டை போலீசார் குகனை கைது செய்தனர்.ரயில் மோதி மயில்கள் பலிதிண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் நேற்று ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 4வது நடைமேடையில் ரயிலில் அடிபட்டு 2 மயில்கள் இறந்து கிடந்தது. போலீசார் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.