உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி...

மீன்பிடிக்க சென்றவர் பலிதாடிக்கொம்பு: பூதிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 42. குடகனாற்றில் வலையை வீசி அதில் சிக்கும் மீன்களை விற்பனைக்கு கொண்டு செல்வது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடிக்க செல்வதாக மனைவி பச்சையம்மாளிடம் கூறி சென்றார். இந்நிலையில் நேற்று காலை மணிகண்டன் உடல் குடகனாற்றில் இறந்த நிலையில் மிதந்தது. தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.ஆயுதங்களுடன் கைதுதாடிக்கொம்பு: அஞ்சலி ரவுண்டானா அருகே நள்ளிரவில் சந்தேகப்படும்படியாக நின்ற நபர், போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்தார். அவரைப் பிடித்து விசாரித்த போது சதீஷ் 30, சாஸ்தா கோயில் தெரு, நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம் என கூறினார். அவரிடம் திருப்புலி, ஸ்குரூ டிரைவர் இருந்தது. இவரை தாடிக்கொம்பு எஸ்.ஐ., பூபதி கைது செய்தார்.கார் மோதி காயம்தாடிக்கொம்பு: திண்டுக்கல் சோலை ராஜா காலனியை சேர்ந்தவர் பெயின்டர் சரவணகுமார் 42. கிழக்கு மீனாட்சிநாயக்கன் பட்டி தனியார் லாரி பட்டறையில் வேலை செய்து வந்தார். திருச்சி மதுரை ரோட்டில் நடந்து சென்றபோது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ரத்தின நகரை சேர்ந்த அருண்குமார் ஓட்டி வந்த கார் மோதியது. தலையில் படுகாயமடைந்த சரவணக்குமார், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாடிக்கொம்பு எஸ்.ஐ., பூபதி விசாரிக்கிறார்.கத்திக் குத்துநிலக்கோட்டை: விளாம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி 28. இவர் மீது, அதே ஊரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் 35, டூவீலரில் மோதுவது போல் வந்து வந்தார். இதில் தகராறு ஏற்பட பெரியசாமியை நவநீதகிருஷ்ணன் கத்தியால் குத்தி தப்பினார். விளாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.புதுமாப்பிள்ளை தற்கொலைவடமதுரை: செங்குறிச்சி அருகே கே.அம்மாபட்டியை சேர்ந்தவர் நீலராஜன் 28. இவருக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. குடி பழக்கத்தில் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. விரக்தியான நீலராஜன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ