உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர் அரசு பள்ளியில் அவலம்

ஒரு மாணவருக்கு 2 ஆசிரியர் அரசு பள்ளியில் அவலம்

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பேரூராட்சியில் நான்கு பள்ளிகள் உள்ளன. இதில், ஒரு பள்ளியில் மட்டுமே 30 மாணவர்கள் படிக்கின்றனர். மற்ற பள்ளிகளில் 20க்கும் குறைவாக தான் மாணவர்கள் உள்ளனர். சந்தைப்பேட்டையில் உள்ள பள்ளியில், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக 10 மாணவர்களுக்கும் குறைவாகவே இருந்தனர். கடந்த ஆண்டு இரு மாணவர்கள் மூன்றாம் வகுப்பு படித்தனர். இந்தாண்டு ஒரு மாணவர் வேறு பள்ளிக்கு சென்று விட்டார்; ஒருவர் மட்டுமே படிக்கிறார். ஆனால், தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர், பணியில் உள்ளனர்.மாணவர் இல்லாததால் ஆசிரியர் அருகில் உள்ள சங்காரட்டிகோட்டை பள்ளிக்கு மாற்று ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியரும் வேறு பள்ளிக்கு மாறுதல் கேட்டுள்ளார்.'அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு ஈர்ப்பு குறைந்து வருவதே இதுபோன்ற நிலைக்கு காரணம்' என, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ