உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் கஞ்சா வீடியோ 6 பேர் கைது

பழநியில் கஞ்சா வீடியோ 6 பேர் கைது

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயில் சிறுவர் பூங்காவில் கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ வெளியிட்ட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ வைரலானது. டி.எஸ்.பி., தனஞ்செயன் உத்தரவில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் விசாரணையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் 20, மகாபிரபு 19, கார்த்தி 19, பாலசுப்ரமணியன்19, ராம்குமார் 19, மதன்குமார் 19 ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா, புகைக்க பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் சிலர் தேடப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ