உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருச்சி ரோடு திடீர் பள்ளத்தில் சிக்கிய கார்

திருச்சி ரோடு திடீர் பள்ளத்தில் சிக்கிய கார்

திண்டுக்கல் : திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது. அரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.திண்டுக்கல் அண்ணாநகரை சேர்ந்த பூர்ணபிரகாஷ் காரில் வந்தார். அண்ணாநகரிலிருந்து திருச்சி ரோடு நுழையும் பகுதியில் வந்தபோது ரோட்டில் 2 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டு காரின் முன்பக்க டயர் சிக்கியது. பொது மக்கள் உதவியோடு அரை மணி நேர போராட்டத்திற்கு பின் கார் மீட்கப்பட்டது. பள்ளத்தில் யாரும் விபத்தில் சிக்ககூடாது என்பதற்காக பேரிக்கார்டுகளை பொது மக்கள் அடையாளத்திற்காக வைத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் தான் திருச்சி ரோடு உள்ளது. அவர்கள் தான் சரிசெய்ய வேண்டும் என கூறி சென்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் பள்ளத்தை சீரமைக்க நடவடிப்பதாக கூறி சென்றனர். திண்டுக்கல்லின் முக்கிய ரோடாக திருச்சி ரோடு உள்ளது. இந்த ரோட்டில் எண்ணி லடங்கா பிரச்னைகள் உள்ளது. ரோடுகள் புதுப்பிக்கும் பணியால் பாதாளசாக்கடை மேன்ஹோல்கள் தாழ்வாக போனது. இதனால் அந்த இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்திக்கின்றனர். பாதிப்பது மக்கள்தான் என்பதை உணர்ந்து இதை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை