உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விளக்குகள் இருந்தும் எரியாது இருள் சூழும் ரயில்வே மேம்பாலம்

விளக்குகள் இருந்தும் எரியாது இருள் சூழும் ரயில்வே மேம்பாலம்

திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் இரவில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இவ்வழித்தடத்தில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை தொடர்கிறது. வாகனங்களில் செல்வோரே அச்சப்படும் போது, பாதசாரிகள் இவ்வழியில் இரவில் பயணிக்க அஞ்சி வேறு பாதையை தேர்வு செய்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதோடு இரவில் இருள் சூழ்ந்து கிடக்கும் ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன. ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநகராட்சி நிர்வாகம் முறையாக மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை வேண்டும்..........ஏற்பாடுகள் செய்யப்படும்திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து மின் விளக்குகள் எரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் .ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ