உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 8500 மண் மாதிரிகள் இலக்கு

8500 மண் மாதிரிகள் இலக்கு

திண்டுக்கல்: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 8500 மாதிரிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் 2024--25ம் ஆண்டிற்கான மண் மாதிரிகள் சேகரித்தல் இலக்கு வட்டார வாரியாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் 60 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கிராமத்திற்கு 100 மண் மாதிரி வீதம் 6,000 மாதிரிகள் , தேர்வு செய்யப்படாத இதர கிராமங்களில் 2500 மண் மாதிரிகள் என 8500 மண் மாதிரிகள் இலக்காக கொண்டு சேகரிக்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடாக ரூ.25.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ