உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.கேரள மாநிலம் மூணாரைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சிவக்குமார் 39. தாராபுரத்திலிருந்து செங்கலை ஏற்றிக்கொண்டு காரைக்குடி சென்றார். தங்கச்சியம்மாபட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரப்பள்ளத்தில் கவிழ்ந்தது . டிரைவர் தப்பினார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ