உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெருமாள் கோயிலில் ஆனி மாத பூஜை

பெருமாள் கோயிலில் ஆனி மாத பூஜை

கோபால்பட்டி: -சாணார்பட்டி வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆனி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு திரவிய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு தாமரை, முல்லை, மல்லிகை, செவ்வந்தி, சம்பங்கி,துளசி உள்ளிட்ட பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நரசிம்மன், ராஜசிம்மன், கண்ணன் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ