உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பத்திரகாளியம்மன் கோயிலில் -முகூர்த்தக்கால்

பத்திரகாளியம்மன் கோயிலில் -முகூர்த்தக்கால்

நத்தம்: -நத்தம் காமராஜர் நகர் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 18-ல் அழகர் மலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கும் நிலையில் நேற்று சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளுடன் முகூர்த்தக்கால் நடப்பட்டது.இதை தொடர்ந்து பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடந்தது. சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஜூன் 21-ல் பால்குடம் , 25ல் அம்மன் நகர்வலம் வருதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிடாய் வெட்டி ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி ஜூலை 2- இரவும், மறுநாள் அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை காமராஜர் நகர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ