உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரத்த கொடையாளர்கள் தினம்

ரத்த கொடையாளர்கள் தினம்

திண்டுக்கல்: ஆண்டு முழுவதும் ரத்தம் கொடுத்த கொடையாளர்களுக்கு திண்டுக்கல் செஞ்சிலுவை சங்கம் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.திண்டுக்கல் முகிழம் அகாடமியில் நடந்த இந்நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் காஜாமைதீன், துணைத் தலைவர் ஷேக் தாவூது, செயலாளர் அபுதாகிர், பொருளாளர் சுசிலாமேரி, பொதுக்குழு உறுப்பினர் ராஜகுரு, தொன்போஸ்கோ கல்லூரி அதிபர்டோமினிக் பெர்னாட்ஷா கலந்து கொண்டனர். கண்ணன் என்பவர் 27 முறை ரத்ததானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரத்த தானம் வழங்கிய 150 க்கு மேற்பட்டவர்களுக்கு நினைவு பரிசு , சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகாடமியின் நிர்வாக இயக்குனர் ராஜேஸ்வரி சுரேஷ், நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !