உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எம்.எல்.ஏ., திறந்து வைத்த கல்வெட்டு உடைப்பு

எம்.எல்.ஏ., திறந்து வைத்த கல்வெட்டு உடைப்பு

வேடசந்துார்: வேடசந்துார் பூத்தாம்பட்டியில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு பணி துவக்க விழா கல்வெட்டில் சிலர் உடைத்த நால்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.வேடசந்துார் ஸ்ரீ ராமாபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டியில் 15 வது நிதிக்குழு மாநில நிதியில் சிமென்ட் ரோடு பணிக்காக வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டு அதற்கான திட்ட மதிப்பீடு விபரங்களுடன் கல்வெட்டு வைக்கப்பட்டது. இதை பூத்தாம்பட்டியை சேர்ந்த கருப்புசாமி, ரஞ்சித்குமார், ஆனந்த்குமார் உடைத்தனர். இதை தடுக்க முயன்ற ஓய்வு ஆசிரியர் ஒருவரையும் ராசு என்பவர் மிரட்டி உள்ளார். ஒன்றிய காங்., கவுன்சிலர் உமா மகேஸ்வரி புகார்படி வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை