| ADDED : ஜூலை 25, 2024 06:45 AM
ஒட்டன்சத்திரம்,: ரேஷன் கடைகளில் பழுப்பு, கருப்பு இல்லாத அரிசி மக்களுக்கு வழங்கப்படுகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திரம் காவேரியம்மாபட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்கள் பெற்றதோடு 22 பயனாளிகளுக்கு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான அனுமதி ஆணை, 17 பயனாளிகளுக்கு உழவர் அட்டை, 3 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, ஒரு பயனாளிக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணை வழங்கியும், ஊராட்சிகளில் ரூ.87.78 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்த அவர் பேசியதாவது:முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது. 14 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கார்டு கேட்டு மூன்று லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மக்களுக்கு தரமான அரிசி வழங்க அனைத்து அரிசி ஆலைகளிலும் ரூ.50 லட்சம் செலவில் கலர் சார்ட்டர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 376 ஆலைகள் இருந்த நிலையில் தற்போது 676 அரிசி ஆலைகள் உள்ளன. இதன்மூலம் பழுப்பு, கருப்பு இல்லாத அரிசியை மக்களுக்கு வழங்கி வருகிறோம் என்றார்.ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் சசி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள் சத்தியபுவனா, துணைத் தலைவர்கள் காயத்ரி தேவி, தங்கம், ஒன்றியச் செயலாளர்கள் தர்மராஜ், ஜோதீஸ்வரன் கலந்து கொண்டனர்.