உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரிப்பணம் கையாடல் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

வரிப்பணம் கையாடல் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியில் வரிப்பணம் ரூ.2லட்சத்தை கையாடல் செய்த கணக்குபிரிவு இளநிலை உதவியாளர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணம் மறுநாள் காலை வங்கியில் செலுத்தப்படும். இங்கு இளநிலை உதவியாளராக உள்ள திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்த சரவணன் நேற்று வரிப்பணம் ரூ.6 லட்சத்தில் ரூ.4 லட்சத்தை செலுத்திவிட்டு ரூ.2 லட்சத்தை கையாடல் செய்தார். கணக்குபிரிவு அலுவலர்கள் கணக்குகளை சரிபார்க்கும்போது சரவணன் கையாடல் செய்தது தெரிந்தது. இதை தொடர்ந்து சரவணனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை