| ADDED : ஜூன் 09, 2024 04:00 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய மூன்றாவது டிவிஷன் சூப்பர் லீக் போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று முதல் இடம் பிடித்த கொடை ரோடு கோடை கிரிக்கெட் கிளப் அணி ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பையை பெற்றது. 2 வெற்றிகளை பெற்ற நத்தம் என்.பி.ஆர் குழும அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் 3வது டிவிஷன் சூப்பர் லீக் போட்டியில் கொடைரோடு கோடை கிரிக்கெட் கிளப் அணி , திண்டுக்கல் மன்சூர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கோடை கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தனர். மனோஜ்குமார் 39, சுரேஷ் 71 ரன்களும் எடுத்தனர். விஜய் பாண்டி 3 விக்கெட்டுகளை எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த மன்சூர் சிசி அணி 23.1 ஓவர்களில் 126 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. விஜய் பாண்டி 50 ரன்கள் அடித்தார். பிரகதீஷ் 4, மதன், மனோஜ்குமார் தலா 3 விக்கெட் எடுத்தனர்.நத்தம் என்.பி.ஆர்., அணி குழும அணிக்கும், திண்டுக்கல், சேலஞ்சர்ஸ் சிசி அணி இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த என்.பி.ஆர்., குழும அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தனர். சுந்தரவடிவேல் 59, பாண்டியராஜன் 32, அஜய் கண்ணன் 33, மணியரசன் 43 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தனர். ரமேஷ் புகழேந்தி 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த சேலஞ்சர்ஸ் சிசி அணி 24.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. ரமேஷ் புகழேந்தி 35, முகமது ஆசிக் 26 ரன்கள் எடுத்தனர். சுந்தரவடிவேல் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.