உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக் ; சேலஞ்சர்ஸ் அணி வெற்றி

கிரிக்கெட் லீக் ; சேலஞ்சர்ஸ் அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான டேக்-டி.டி.சி.ஏ. கிரிக்கெட் லீக் போட்டியில் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் சி.சி. அணி 23.3 ஓவரில் 201 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.முகமதுஆஷிக் 44, ரமேஷ் 36, ஹரிஹரன் 44ரன்கள், பூபதிராஜா 5 (ஹாட்ரிக் உட்பட) விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் மன்சூர் சி.சி.அணி 26 ஓவரில் 151ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ஜெயவீரபாண்டியன் 56, சல்மான்கான், ரமேஷ் தலா 3 விக்கெட் எடுத்தனர்.. ஆர்.வி.எஸ்.மைதானத்தில் நடந்த ஸ்ரீ பாலாஜி பவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய கொடைக்கானல் லெவன் அணி 18.5 ஓவரில் 97 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. கார்த்திக் 34(நாட்அவுட்)ரன்கள், சரத்ராம் 3 விக்கெட் எடுத்தனர்.சேசிங் செய்த திண்டுக்கல்லெவன் ஸ்டார் சி.சி. அணி 18.5 ஓவரில் 7 விக்கெட் மட்டுமே இழந்து 100ரன்கள் எடுத்து வென்றது. ரூபன் ராஜ் 3 விக்கெட் எடுத்தார். என்.பி.ஆர். டர்ப் மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய திண்டுக்கல்ஆதித் சி.சி. அணி 23.5 ஓவரில் 170 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. சுதிர் 50ரன்கள், பாலகிருஷ்ணன் 5, விஜய்குமார் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் மன்சூர் யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 25 ஓவரில் 7 விக்கெட் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அசாருதீன் 55, தினேஷ்குமார் 45ரன்கள் எடுத்தார். வேடசந்துார் ஜாஹிர் பிராமிசிங் லெவன் அணி 25 ஓவரில் 3 விக்கெட் இழந்து 187ரன்கள் எடுத்தது. கார்த்திக் 79, திருகுமரன் 54(நாட்அவுட்) ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த பாப்பம்பட்டி எய்ம்ஸ்டார் சி.சி. அணி 22.5 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அருண் பாண்டியன் 49 ரன்கள், சஞ்சய் 3, சிலம்பரசன் 4 விக்கெட் எடுத்தனர். ஆர்.வி.எஸ். கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில் கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழந்து 120ரன்கள் மட்டுமே எடுத்தது. மணிகண்டபிரபு 50ரன்கள், அகஸ்டின் 3 விக்கெட்(ஹாட்ரிக் உட்பட) எடுத்தனர்.சேசிங் செய்த திணடுக்கல் ஸ்கை சி.சி. அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 123ரன்கள் எடுத்து வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி