உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் போட்டி: நெல்லை தேனி அணிகள் வெற்றி

கிரிக்கெட் போட்டி: நெல்லை தேனி அணிகள் வெற்றி

திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் நெல்லை, தேனி அணிகள் வெற்றி பெற்றது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. 50 ஓவர்கள் அடிப்படையில் ஒரு நாள் போட்டிகளாக முதல் சுற்று போட்டிகள் நடக்கின்றன. திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் பி.எஸ்.என்.ஏ., ஸ்ரீவீ,ஆர்.வி.எஸ்., ஆகிய கல்லுாரிகளில் போட்டிகள் நடக்கிறது.நேற்று நடந்த முதல் சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி, திருநெல்வேலி அணியை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய திருநெல்வேலி அணி 49.5 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்தது. ஸ்ரீஹரி 5 விக்கெட்டுகள் எடுத்தார். தொடர்ந்து 2 வது இன்னிங்க்ஸின் போது மழை பெய்ததால் 42 ஓவராக குறைக்கப்பட்டு 122 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திண்டுக்கல் அணி 37.5 ஓவர்களில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. சசிகுமார் 47(நாட் அவுட்), லகான் 5 விக்கெட்டுகள் எடுத்தார். வி.ஜெ.டி., முறையில் நெல்லை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் விருதுநகர் அணி தேனி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டீங் செய்த விருதுநகர் அணி 39 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்தது. நிரஞ்சன் வீர் 40 ரன்களும், அபிமன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் எடுத்தார். சேசிங் செய்த தேனி அணி 22 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிமன் சுந்தர் 54 (நாட் அவுட்). ரன்கள் எடுத்தார். இன்று நடக்கும் போட்டிகளில் நெல்லை அணி- தேனி அணியையும், விருதுநகர் அணி ,தென்காசி அணியையும் எதிர்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை