உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செம்பு முருகன் கோயிலில் டென்னிஸ் வீரர்கள் தரிசனம்

செம்பு முருகன் கோயிலில் டென்னிஸ் வீரர்கள் தரிசனம்

ரெட்டியார்சத்திரம் : மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில் வென்ற வீரர்கள் பாதாள செம்பு முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர்.தர்மபுரியில் நடந்த மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் 15, 17 வயது உட்பட்ட குழு போட்டியில் மாணவியர் யோகா ஸ்ரீ, ரிட்சிதா தேவி, அக்க்ஷயா ஸ்ரீ, தன்மயா இரண்டாம் இடம், 13 வயது பிரிவில் ஜெசிந்தா ஹென்சி சகாய் மூன்றாம் இடம் பெற்றனர். தனிநபர் பிரிவில் 17 வயது போட்டியில் யோகா ஸ்ரீ முதலிடம், 15 வயது பிரிவில் ரிச்சிதா தேவி, 13 வயது பிரிவில் ஹேமேந்திரன், 11 வயது பிரிவில் தீபக் முருகன் வென்றனர். பயிற்சியாளர் ஜேம்ஸ் தலைமையிலான இக்குழுவினர், ரெட்டியார்சத்திரம் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர். அறிவானந்த சுவாமியிடம் சான்றிதழ் கோப்பைகளுடன் ஆசி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !