உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டத்து விநாயகர் கும்பாபிஷேகம்

பட்டத்து விநாயகர் கும்பாபிஷேகம்

ஒட்டன்சத்திரம்: பழைய ஒட்டன்சத்திரம் ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி நேற்று முன் தினம் விநாயகர் வழிபாடு, மஹாசங்கல்பம், பஞ்சகவ்யம், கணபதி கலச பூஜை, மகாலட்சுமி பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணஹூதி நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து வாஸ்து சாந்தி ஹோமம், புனிதமண் எடுத்தல் நடந்தது. அன்று மாலை கலசம் புறப்பட்டு யாகசாலையில் எழுந்தருளல் ,முதற்கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. அன்றிரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. விநாயகருக்கு காப்பு கட்டுதல், த்வார பூஜை நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களால் புனித தீர்த்தங்கள் கோயில் கலசங்களில் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர். விழாவில் கலந்து கொணடவர் களுக்கு அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ