| ADDED : ஜூன் 20, 2024 05:27 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் இன்று துவங்குகிறது.இப்போட்டிகள் ஈரோடு,நாமக்கல், தர்மபுரி,புதுக்கோட்டை, தூத்துக்குடி,அரியலுார், திருவண்ணாமல , திண்டுக்கல் என 8 மாவட்டங்களில் நடக்கிறது. இதில் 37 மாவட்டத்தைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.முதல் சுற்று போட்டிகள் 50 ஓவர்கள் அடிப்படையில் ஒரு நாள் போட்டிகளாக நடைபெறுகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் பி.எஸ்.என்.ஏ., ஸ்ரீவீ. ஆர்.வி.எஸ்., கல்லுாரிகளின் மைதானங்களில் நடக்கிறது. திண்டுக்கல்லில் நடக்கும் போட்டிகளில் திண்டுக்கல், தேனி , விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணிகள் பங்கு பெறுகின்றன.இன்று நடக்கும் முதல் சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி, திருநெல்வேலி அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில் விருதுநகர் அணி தேனி அணியை எதிர்கொள்கிறது.திண்டுக்கல் மாவட்ட அணிக்குபிரசித்தி வித்யோதயா பள்ளியைச் சேர்ந்த தஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அமர்நாத் தெரிவித்தார்.