உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொசவபட்டியில் கல்வி வளர்ச்சி நாள்

கொசவபட்டியில் கல்வி வளர்ச்சி நாள்

சாணார்பட்டி : கொசவப்பட்டி அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா, மன்றங்கள் தொடக்கவிழா நடந்தது. மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தார், பள்ளி தாளாளர் ஜான்சன் எடின்பர்க் முன்னிலை வகித்தார், திருவருட்பேரவை தலைவர் டாக்டர் கே.ரத்தினம்,இணைச்செயலாளர் திபூர்சியஸ், பொருளாளர் காஜா மைதீன் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் ,விளையாட்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கேடயம்,சான்றிதல் வழங்கபட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஜெய ஆரோக்கியசெல்வன், சேக்ஸ் ராஜ், ஒருங்கிணைப்பாளர் தனராஜ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ