உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / யானைகள் நடமாட்டத்தால் அச்சம்

யானைகள் நடமாட்டத்தால் அச்சம்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி நல்லுார்காடு பெரியூர் பகுதியில் நடமாடிய காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.கே.சி. பட்டி, ஆடலுார், பன்றிமலை, பாச்சலுார், மன்றவயல் ,சேம்படியூத்து, பெரியூர், கே. சி. பட்டி உள்ளிட்ட பகுதியில் சில ஆண்டுகளாக காட்டு யானை நடமாட்டம் உள்ளது. 'இந்த யானைகள் ஒட்டன்சத்திரம், பண்ணைப்பட்டி கோம்பை, கன்னிவாடி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து மலைப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில நாட்களாக நல்லுார்காடு வளைவு பகுதியில் முகாமிட்ட யானைகள் நேற்று முன்தினம் காலை குடியிருப்பு பகுதியில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதியில் விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்