உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் கொலையில் சிறுவர்கள் உட்பட ஐவர் கைது

திண்டுக்கல் கொலையில் சிறுவர்கள் உட்பட ஐவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வினோத் 30. 2020ல் ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்தார். சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த வினோத் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது கும்பல் ஒன்றால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட சுனில்சூர்யா 19, அய்யனார் 27, 17 வயதிற்கு குறைவான 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ