திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடந்த முதல் டிவிஷன் லீக் போட்டியில் சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.லயன்ஸ் ரத்தினம், ராஜேஸ்குமார் நினைவு கோப்பையின் முதல் டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய அரசு மேல்நிலைப்பள்ளி ஓல்டு பாய்ஸ் எப்.சி.அணியானது செவன் டாலர்ஸ் எப்.சி. அணியை 4:0 என்ற கோல்கணக்கில் வென்றது. விஜய், ராஜ்மோகன், விக்கி, ஜேம்ஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.ஆர்.டி.என். மேஜர் டோனர் ஜி.சுந்தரராஜன், அரசன் ரியல் எஸ்டேட் கோப்பையின் பிரிமியர் டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய அனுமந்தராயன்கோட்டை லயோலா எப்.சி.அணியானது நிலக்கோட்டை சோழார் எப்.சி.அணியை 2:1 என்ற கோல்கணக்கில் வென்றது. அனுமந்தராயன்கோட்டை லயோலா எப்.சி.அணியின் ஜோவிட், டோம்னிக் தலா ஒரு கோல் அடித்தனர். நிலக்கோட்டை சோழார் எப்.சி.அணியின் நவநீதகிருஷ்ணன் ஒரு கோல் அடித்தார். லயன்ஸ் கே.ரத்தினம், எஸ்.ராஜேஷ்குமார் நினைவு கோப்பையின் முதல் டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியானது ஆர்ட்ஜ் டிரஸ்ட் திண்டுக்கல் சிட்டி எப்.சி. அணியை 5:2 என்ற கோல்கணக்கில் வென்றது. சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் கணேஷ் 2, ஜாக், ஜோயல், எம்டி.பாட்டின் ஒரு கோல் அடித்தனர். ஆர்ட்ஜ் டிரஸ்ட் திண்டுக்கல் சிட்டி எப்.சி. அணியின் ஜிதேவ், முகிலேஷ்குமார் தலா ஒரு கோல் அடித்தனர்.கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள எஸ்.டி.ஏ.டி.மைதானத்தில் நடந்த கே.பி.சுந்தரம் செட்டியார் நினைவு, நாகர்கோவில் சிவன் செட்டியார் நினைவு கோப்பையின் 4வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய அன்னை ஸ்போர்ட்ஸ் அணியானது ஜி.எஸ்.ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 6:1 என்ற கோல்கணக்கில் வென்றது. அன்னை ஸ்போர்ட்ஸ் அணியின் மாரி 2, பிரகாஷ், கோகுல், மோகன், அரவிந்த் தலா ஒரு கோல் அடித்தனர். ஜி.எஸ்.ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் டுடோ ஒரு கோல் அடித்தார். கீதா டிம்பர்ஸ், ரத்தினபாண்டியன் நினைவு கோப்பையின் 2வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய வத்தலக்குண்டு ராயல் எப்.சி.அணியானது சுந்தரம் மெமோரியல் எப்.சி. அணியை 3:0 என்ற கோல்கணக்கில் வென்றது. சபரி 2, திவாகர் ஒரு கோல் அடித்தனர்.கே.பி.சுந்தரம் செட்டியார் நினைவு, நாகர்கோவில் சிவன் செட்டியார் நினைவு கோப்பையின் 4வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய அரசன் எப்.சி.அணியானது ஞானம் நினைவு எப்.சி.அணியை 3:0 என்ற கோல்கணக்கில் வென்றது. ரிச்சர்ட் 2, ராஜ்மோகன் ஒரு கோல் அடித்தனர்.புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த கீதா டிம்பர்ஸ், ரத்தினபாண்டியன் நினைவு கோப்பையின் 2வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய லைன் ஸ்டிரீட் எப்.சி.அணியானது செயின் மேரீஸ் எப்.சி.அணியை 2:1 என்ற கோல்கணக்கில் வென்றது. லைன் ஸ்டிரீட் எப்.சி.அணியின் சூர்யபிரகாஷ், வருண் தலா ஒரு கோல் அடித்தனர். செயின் மேரீஸ் எப்.சி.அணியின் ஆரோக்கியராஜ் ஒரு கோல் அடித்தார். கொரோனேசன் எப்.சி.அணியானது ஏ.பி.சி.பாலிடெக்னிக் எப்.சி.அணியை 1:0 என்ற கோல்கணக்கில் வென்றது. சதீஸ்குமார் ஒரு கோல் அடித்தார். என்.எஸ்.புரம்விஜயராகவேலு நினைவு, அரசன் ஜிவல்லர்ஸ் கோப்பையின் 3வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய பழநி ஸ்டாலின் எப்.சி.அணியானது ஆர்.என்.லெட்சுமணசுவாமி நினைவு எப்.சி. அணியை 3:0 என்ற கோல்கணக்கில் வென்றது. கணேஷ், எடிசன், விக்னேஷ் தலா ஒரு கோல் அடித்தனர்.