உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா போதையில் சிறுவர்கள் வீடியோ வைரலால்; அச்சத்தில் மக்கள்

கஞ்சா போதையில் சிறுவர்கள் வீடியோ வைரலால்; அச்சத்தில் மக்கள்

பழநி:பழநி பகுதியில் கஞ்சா புகைக்கும் சிறுவர்கள் வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதை பார்த்த பலரும் அச்சத்தில் உள்ளனர்.பழநி கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் பூங்கா சிவகிரிபட்டி பைபாஸ் சாலையில் உள்ளது. தினமும் மாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் அதிக அளவில் வருவர். இங்கு சிறுவர்கள் நான்கு பேர் கஞ்சாவை பயன்படுத்தி போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரலாகி வருகிறது . இதை பார்க்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.பழநி பகுதியில் கஞ்சா எளிதாக புழக்கத்தில் உள்ள நிலையில் அரசுக்கு சொந்தமான பூங்காக்களை கஞ்சா போதைக்கு அடிமையான நபர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, கலிக்க நாயக்கம்பட்டி, பாலசமுத்திரம் போன்ற பகுதி பூங்கா, புறவழி பகுதிகளில் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்படுகிறது. சிறுவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் கஞ்சா போதைப் பொருட்களை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூலை 05, 2024 04:49

சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, கவலையற்று இருக்க வேண்டும் என்பதே எங்கள் மாடலின் குறிக்கோள்.


புதிய வீடியோ