உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் குரு பூர்ணிமா பூஜை

கோயில்களில் குரு பூர்ணிமா பூஜை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.விருப்பாச்சி தலையூற்று நாக விசாலாட்சி அம்மனுக்கும், ஸ்ரீநல்காசி விஸ்வநாதருக்கும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.சின்னாளபட்டி லிங்குசாமி மடத்தில் குரு பூர்ணிமா சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவாசக முற்றோதலுடன் விசேஷ ஆராதனைகள் நடந்தது.கன்னிவாடி குட்டத்துப்பட்டி அருகே சாய்பாபா ஞானாலயம், பிச்சை சித்தர் கோயில், கீழதிப்பம்பட்டி மணி சித்தர் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், குரு பூர்ணிமா சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ