உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாய் சுருதியில் குரு பூர்ணிமா

சாய் சுருதியில் குரு பூர்ணிமா

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சாய் சுருதியில் குரு பூர்ணிமா விழா நடந்தது. ஒம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், வேதபாராயணத்துடன் கொடியேற்றுதலுடன் விழா தொடங்கியது. பஜனைகள், சத்சங்கம்,ஆராத்தி நடந்தது. 6 ஆயிரம் நபர்களுக்கு வஸ்திரதானம்,நாராயண சேவைகள் வழங்கப்பட்டது. தமிழ் நாடு சத்ய சாய் சேவா நிறுவன அங்கத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் தினமும் சிறப்பு அபிஷேகம்,மூன்று வேளை அன்னதானமும் நடக்கிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடக்கிறது. குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு பாபாவிற்கு பக்தர்கள் கரங்களால் பாலாபிஷேகம்,சிறப்பு பூஜை நடந்தது. காலை ஆரத்தி முடிந்தவுடன் பக்தர்களுக்கு இட்லி, பிரசாதமும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை சிறப்பு பூஜை,பஜனை நடந்தபின் சப்பாத்தி பிரசாதம் வழங்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் சாமியார்புதுார் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் அபிஷேகங்கள், அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ