உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் தொடர் மழை சுற்றுலா தலங்கள் வெறிச்

கொடையில் தொடர் மழை சுற்றுலா தலங்கள் வெறிச்

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதியில் பெய்யும் தொடர் மழையால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.இம்மலை பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தாண்டிக்குடி கீழ் மலையில் நேற்று காலை முதலே இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொடைக்கானலில் மதியத்திற்கு பின் பனி மூட்டத்துடன் சாரல் மழை நீடித்தது. மாலை 4:00 மணிக்கு பிறகு மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. அடர் பனிமூட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. பயணிகள் வருகையின்றி முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ