உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாக்கடையில் குவியும் பிளாஸ்டிக் கழிவால் தொற்று

சாக்கடையில் குவியும் பிளாஸ்டிக் கழிவால் தொற்று

மின்கம்பத்தை சுற்றி புதர்கள்பாகாநத்தம் ஊராட்சி முள்ளாம்பட்டியில் மின்கம்பத்தை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது .இதனால் மழை நேரங்களில் விபத்து அபாயம் உள்ளது .மின்கம்பத்தை சுற்றி உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகன், முள்ளாம்பட்டி................-------ரோட்டோரத்தில் பள்ளம்ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் காளாஞ்சிபட்டி மேம்பாலம் அருகே ரோட்டின் கிழக்கு ஓரத்தில் மழையால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்து அபாயம் உள்ளதால் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்னன் ஒட்டன்சத்திரம்.............-------பெயர் பலகை சேதம்திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகை சேதம் அடைந்து வளைந்துள்ளது .இதனால் வாகனஓட்டிகள் குழப்ப நிலைக்கு ஆளாகின்றனர். இதன் பெயர் பலகையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சந்தோஷ்குமார், தாமரைப்பாடி .................--------மாயமான இரும்பு தகடுகள்எரியோடு 'சப் வே'க்குள் மழை நீர் செல்லாமல் இருக்க முகப்பு பகுதி இரு திசையிலும் வாய்க்காலுடன் சல்லடை போன்ற இரும்பு தகடுகள் வைக்கப்பட்டது. இவற்றில் சில திருடு போனதால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. வேல்முருகன், எரியோடு.................--------தகுதியற்ற நிலையில் ரோடுமொட்டையன்கவுண்டன்பட்டியில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக தகுதியற்ற நிலையில் உள்ளது. சாலையில் பயணிக்கும் பள்ளி குழந்தைகள் ,கர்ப்பிணிகள் பாதிக்கின்றனர். வீரா, கே.அய்யாபட்டி.............---------சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுதிண்டுக்கல் அருகே குள்ளனப்பட்டி ரோடு சாக்கடையில் குப்பை பிளாஸ்டிக் கழிவு அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால் கால்வாயை துாவார வேண்டும். ஜெகதீஷ், திண்டுக்கல்................---------சுற்றுசூழலுக்கு பாதிப்புதிண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்து பல நாட்களாகியும் அள்ளாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பையை குவித்து வைப்பதால் சுற்றுசூழல் பாதிப்பதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது . இதை அகற்ற வேண்டும்.முருகேசன், திண்டுக்கல்...........---------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ