உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறையிலிருந்து ஜாமினில் வந்தவர் கொலை: 5 மணி நேரத்தில் இருவர் கைது

சிறையிலிருந்து ஜாமினில் வந்தவர் கொலை: 5 மணி நேரத்தில் இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்து ஜாமினில் வந்த கூலித்தொழிலாளி பாண்டி,நேற்று அதிகாலை அடித்து கொலை செய்யப்பட்டார். போலீசார் 5 மணி நேரத்தில் இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர். திண்டுக்கல் திருமலைச்சாமிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி38. இவர் தன் வீட்டின் அருகே உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கில் கைதாகி 25 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு பாண்டி, ஒத்தக்கண் பாலம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் தன் நண்பர்களான வேடப்பட்டியை சேர்ந்த முருக்கு வியாபாரி தண்டபாணி39,மாலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்28 உள்ளிட்ட நால்வரோடு மது அருந்தினார். நேற்று அதிகாலை 1:00 மணி ஆகியும் அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் தொடர்ந்து அங்கேயே அமர்ந்து மது அருந்தினர். அப்போது பாண்டிக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தண்டபாணி, கார்த்திக் உள்ளிட்ட நால்வரும் சேர்ந்து பாண்டியை,அருகிலிருந்த கல்லால் அடித்தும் மது பாட்டில்களால் தாக்கியும் கொலை செய்து அங்கிருந்து தப்பினர். தகவலறிந்த தெற்கு போலீஸ் இன்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை துவக்கினர். இரவு முழுவதும் போலீசார் துாங்காமல் வேடப்பட்டி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு 5 மணி நேரத்தில் கொலையில் தொடர்புடைய தண்டபாணி, கார்த்திக்கை கைது செய்து தப்பிய 2 பேரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ