உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரை, நத்தத்தில் கஞ்சி கலச ஊர்வலம்

வடமதுரை, நத்தத்தில் கஞ்சி கலச ஊர்வலம்

வடமதுரை : வடமதுரை இ.பி.காலனியில் இருக்கும் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் 21ம் ஆண்டு கலச விளக்கு, வேள்வி பூஜை, கஞ்சி கலச ஊர்வலம் என முப்பெரும் விழா நடந்தது. கலச விளக்கு, வேள்வி பூஜைகளைத் தொடர்ந்து நேற்று பக்தர்கள் கஞ்சிக் கலசங்களை சுமந்தபடி இ.பி. காலனியில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக நகரை வலம் வந்தனர். ஏற்பாட்டினை வழிபாட்டு மன்ற செவ்வாடை தொண்டர்கள் செய்தனர்.நத்தம் செந்துறை குரும்பபட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக உலக நன்மைக்காகவும்,நல்லமழை பெய்யவேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவர்களுக்கு கல்வி வளரவும், பிணி நீங்கவும், தொழில் வளம் பெருகவும் வேண்டி செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலசத்தை தலையில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சிக்கலையங்களை வேப்பிலை போர்வையில் அடுக்கி தீபாராதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ