உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜூன் 25 ல் கால்நடை கண்காட்சி துவக்கம்

ஜூன் 25 ல் கால்நடை கண்காட்சி துவக்கம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே உள்ள எஸ்.அத்திக்கோம்பையில் கால்நடை கண்காட்சி ஜூன் 25 ல் துவங்கி ஜூலை 1 வரை நடக்கிறது.ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் உள்ள எஸ்.அத்திக்கோம்பையில் ஸ்ரீஎட்டுக்கை உச்சிமா காளியம்மன் கோயிலின் 128 ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கால்நடை கண்காட்சி (மாட்டுத்தாவணி) நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள், குதிரைகள் பங்கேற்க உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை சுவான்தார் டிரஸ்டிகள், நிர்வாக டிரஸ்டிகள் தங்கமுத்துபிள்ளை, ரவீந்திரன்பிள்ளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ