| ADDED : ஜூலை 15, 2024 05:03 AM
ஒட்டன்சத்திரம், ; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்தது.ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு இங்குள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விற்பனையாகும் காய்கறிகளில் 70 சதவீதத்திற்கும் மேல் கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். வரத்து அதிகரித்ததால் நேற்று சில காய்களின் விலை குறைந்து காணப்பட்டது. வெள்ளியன்று கிலோ ரூ.110க்கு விற்ற முருங்கை ரூ. 20 குறைந்து ரூ.90 க்கு விற்றது. இதே போல் கிலோ ரூ.23 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.6 குறைந்து ரூ.17 க்கும், கிலோ ரூ.60 க்கு விற்ற அவரைக்காய் ரூ.10 குறைந்து ரூ.50 க்கும், ரூ 32 க்கு விற்ற பீட்ரூட் ரூ.2 குறைந்து ரூ. 30க்கும் விற்பனை ஆனது.