உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அச்சுறுத்தும் ஆடிக் காற்று... சாய்ந்த மரங்கள்

அச்சுறுத்தும் ஆடிக் காற்று... சாய்ந்த மரங்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அச்சுறுத்தும் வகையில் வீசும் காற்றினால் மரங்கள் விழுகிறது .இதன் காரணமாக மின் தடையும் ஏற்படுகிறதுசில நாட்களாக காற்றின் வேகம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே ரோட்டோர மரங்கள் சாய்ந்து விழுகின்றன. பழநி உழவர் சந்தை ரோட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே உள்ள வேப்ப மரம் சாய்ந்ததில் தள்ளுவண்டி நொறுங்கியது. இங்கிருந்த வியாபாரிகள் நுாலிலையில் உயிர் தப்பினர். இதேபோல் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 7 வது கிராசில் 30 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முறிந்து அருகே உள்ள வீட்டின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சாய்ந்த மரத்தினை அகற்றினர். அதே நேரத்தில் காற்றின் வேகத்தால் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் தள்ளாடி வருகின்றன. மேலும் மின் கம்பிகள், கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து மின்தடையும் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை