| ADDED : ஆக 03, 2024 04:58 AM
ரத்தக்குழாய் அடைப்பினால் இதயத்தின் ஒரு பகுதி செயலிழப்பதே மாரடைப்பு ஆகும். அது உயிருக்கு ஆபத்தான நிகழ்வாகவும் வாய்ப்புண்டு. இந்நோயினை பற்றிய உங்களின் சில கேள்விகளுக்கு பதில் இதோ...1.ரத்தக்குழாய்களில் எதனால் அடைப்பு உருவாகிறது ?நம் ரந்தத்தில் கலந்திருக்கும் கொழுப்புச்சத்து நாளடையில் ரத்த நாளங்களின் உட்புறத்தில் படியும். ரத்தக் கொழுப்பின் அளவைத் தவிர பிற தன்மைகளைப் பொறுத்தும் ஒருவரின் ரத்தக்குழாய்கள் அடைபடுவதற்கான வாய்ப்பு அமையும். எடுத்துக்காட்டாக ரத்தக் கொழுப்பின் அளவிற்கு நீரழிவு நோயாளிகள் அல்லாதவர்களைவிட நீரழிவு நோயாளிகளுக்கு அடைப்புகள் உருவாக வாய்ப்பு அதிகம். இந்த அடைப்புகள் மெல்ல பெரிதாகி ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். சிறு கொழுப்பு படிவம் கூட உடைந்து சிதைந்த இடத்தில் ரத்த உறைவு உருவாகலாம். இந்த நிகழ்வே திடிரென ஏற்படும் மாரடைப்பு ஆகும்2. புகை, மது அருந்தாத உணவில் கவனம் கொண்ட தினமும் உடற்பயிற்சி செய்யும் 40 வயதானவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறதே ?மாரடைப்பு ஏற்பட இன்னும் அறியப்படாத காரணிகள் பல உள்ளன. தெரிந்த காரணிகளில் பல மாற்ற முடியாத மரபணுவால் நிர்ணயம் செய்யக்குடியதாகும். சில நேரங்களில் உயர் ரத்த அழுத்தம் ,நீரழிவு நோய், அதிக கொழுப்பு போன்றவை மாரடைப்பு வரும் வரை கவனிக்கப்படாமல் போகிறது.3. இதய நோயினை முன்கூட்டியே கண்டறிய என்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?முதலாவதாக இதய நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும். உடற்பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மூலமாக ஒருவருக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்பை கணிக்க முடியும். ஈ.சி.ஜி., எக்கோ ஸ்கேன் மூலமாக ஒருவரின் தற்போதைய இதய செயல் பாட்டை அறிந்து கொள்ளலாம்.4. எனக்கு எப்போதாவது நெஞ்சு வலி ஏற்படுகிறது. எனது ஈ.சி.ஜி., எக்கோ நன்றாக உள்ளது. எனக்கு இதய நோய் இல்லை என்று கொள்ளலாமா?ஈ.சி.ஜி., எக்கோ மூலமாக இதய தசை அப்போது நன்றாக உள்ளது என்று மட்டுமே கூறமுடியும். இதய ரத்தக்குழாயின் அடைப்பு பற்றி கூறமுடியாது. அந்த சந்தேகம் ஏற்பட்டால் டி.எம்.டி., அல்லது CT scan செய்யலாம். மாரடைப்புக்கு அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தேவைப்படலாம்.5. ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்க என்ன வரையான மருந்துகள் உள்ளன ?துரதிஷ்டவசமாக ரத்தக்குழாய் அடைப்புகளை அகற்ற முறையான வழிமுறைகள் ஏதும் நம் உடலில் இல்லை. அடைப்புகள் மோசமாகும் வேகத்தை குறைக்கவும் அவற்றின் தன்மையை மாற்றி அமைக்கவும் மருந்துகள் உள்ளன. அதே அளவு ரத்தக்குழாய் குறுகலாக இருந்தாலும் மருந்துகளினால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.6. ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன ?மிகுந்த வலியில்லாத இப்பரிசோதனை மூலம் அடைப்புகள் எங்கு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் ஆஞ்சியோபிளாஸ்டி என்பது அடைப்பட்ட ரத்தக்குழாயை பலுான், (Stent) வலையின் மூலமாக சரிசெய்யும் சிகிச்சை முறையாகும். நவீன தொழில்நுட்பத்தினால் பாதுகாப்பான முறையாக மட்டுமல்லாமல் சிறந்த நீண்டகால பயன்களை கொடுக்கிறது.-டாக்டர் ஆனந்த், டி.தெய்வசிகாமணிபுரம், திண்டுக்கல் .90907 77767.