உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலங்கை அகதி முகாமில் கொலை; கைது

இலங்கை அகதி முகாமில் கொலை; கைது

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் இலங்கை அகதி ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஆனந்தகுமார் 40 . இவர் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த நாகராஜ் 30, என்பவருடன் வேலைக்கு சென்றார். இதில் ஏற்பட்ட நட்பில்இருவரும் முகாமில் உள்ள ஆனந்தகுமார் வீட்டில் மது அருந்தினர். மறுநாள் காலையில் ஆனந்தகுமார் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அருகில் இருந்தர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஆனந்தகுமார் இறந்து கிடந்தார். வத்தலக்குண்டு போலீசார் விசாரணையில்,மது அருந்திய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போதையில் இருந்த நாகராஜ், ஆனந்த குமாரை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பினார். நாகராஜை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை