உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முத்தாலம்மன் கோயில் திருவிழா

முத்தாலம்மன் கோயில் திருவிழா

நத்தம்: நத்தம் கல்வேலிபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. முதல்நாள் மேளதாளம் முழங்க வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக அம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. அக்னிசட்டி, மாவிளக்கு, கரும்பு தொட்டில்,முளைப்பாரி,கிடாய்கள் வெட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று மாலையில் பக்தர்கள் புடைசூழ தீவட்டி பரிவாரங்களுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ