உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பையை தரம்பிரிக்க புதுடீம் : மாநகராட்சி அறிமுகம்

குப்பையை தரம்பிரிக்க புதுடீம் : மாநகராட்சி அறிமுகம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் குப்பையை தரம்பிரித்து வாங்குவதற்கு ஐ.டி.சி.எனும் புது குழுவை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் துாய்மை பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குப்பையை துாய்மை பணியாளர்கள் தினமும் வீடு வீடாக சென்று பெறுவதோடு மக்கும்,மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க சுகாதார பிரிவினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்,குப்பையை தரம்பிரித்து வழங்குபவர்களை ஊக்குவிப்பதற்காக பரிசும் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும் 60 சதவீத மக்கள் தான் குப்பையை தரம்பிரித்து வழங்கும் நிலை உள்ளது. இதை 100 சதவீதமாக மாற்றும் வகையில் ஐ.டி.சி.,எனும் குழுவினர் 20 தன்னார்வலர்களை மாநகராட்சி அலுவலர்களோடு இணைத்து மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிமுக கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மேயர் இளமதி தலைமை வகித்தார். துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் முத்துக்குமார்,உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார்,சுகாதார அலுவலர் விஜய்ஆனந்த்,சுகாதார ஆய்வாளர் ஸ்டீபன் இளங்கோ ராஜ் முன்னிலை வகித்தனர். ஐ.டி.சி.,குழுவினர் 56,000 பேருக்கு மறு சுழற்சி செய்யும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் வகையிலான பை வழங்கி அதில் சேகரிக்கும் கழிவுகளை மக்கள் துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். குப்பையை பெறும் துாய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஐ.டி.சி.,குழுவிடம் வழங்கி அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் துாய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மக்கும் கழிவுகளை உரமாக மாற்றி விவசாய தேவைக்கு பயன்படுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை