உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சமரசத்திற்கு இடமில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்

சமரசத்திற்கு இடமில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்

சின்னாளபட்டி : ''மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அரசு எவ்வித சமரசமின்றி உறுதியாக உள்ளதாக,'' அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.ஆத்துார் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டியில் அம்பாத்துறை, செட்டியபட்டி, என்.பஞ்சம்பட்டி ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாமை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இத்திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். முதல்வரின் நேரடி கண்காணிப்பில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதி மனுக்களை பரிசீலித்து உரிமைத்தொகை பெற்று தரப்படும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அரசு எவ்வித சமரசமின்றி உறுதியாக உள்ளது. கோரிக்கைகளை கேட்டு தீர்வு வழங்கும் முதல்வராக இந்தியாவிற்கே முன்மாதிரியாக ஸ்டாலின் உள்ளார், என்றார்.கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, முருகேசன் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., சக்திவேல் வரவேற்றார்.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், பி.டி.ஓ., க்கள் குமாரவேல், அருள்கலாவதி, ஊராட்சி தலைவர் பாப்பாத்தி, செயலாளர் சேசுராஜ் பங்கேற்றனர்.தொப்பம்பட்டி: பழநி தொப்பம்பட்டியில் மக்களிடம் முதல்வர் சிறப்பு முகாமை உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார். மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், 50 ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 'டேப் ' வழங்கப்பட்டது.இதில் அமைச்சர் பேசியதாவது: தொட்டம்பட்டி வட்டாரத்தில் மேட்டுப்பட்டி, புளியம்பட்டி, கொங்க முத்துார், வேலம்பட்டி, தொப்பம்பட்டி, தும்பலபட்டி ஆறு ஊராட்சிகளில் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது. 22 அரசுத்துறைகள் தொடர்புடைய கோரிக்கை மக்கள் பெறப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் தகுதி அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். புது தாராபுரம் ரோட்டில் விரைவில் ரயில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றார். ஊரக வளர்ச்சி ம திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஓ.,சரவணன் ,தாசில்தார் சக்திவேலன் சசி உடபட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ